1. Home
  2. தமிழ்நாடு

தலைநகரில் நாளை முதல் டீசல் வாகனங்களுக்கு தடை!

1

தலைநகர் டெல்லியில் பிஎஸ் VI வகை, சிஎன்ஜி (இயற்கை எரிவாயு மின்சாரம்) மற்றும் டீசல் பேருந்துகள் மட்டும் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையின் மூலம் 60 சதவீத பேருந்து இயக்கப்படாது. இந்த விதிமுறை பயணிகளிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

டெல்லியில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட பிஎஸ் III மற்றும் பிஎஸ் IV வகை டிராவல்ஸ் பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர். அதே வேளையில் டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசுபாட்டால் GRAP என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு டெல்லியின் பிஆர்டி சாலையில் அக்டோர் மாதத்திலேயே அதிக மாசு காரணமாக புகை மூட்டம் காணப்பட்டதால் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சாலைகளில் 400 மீட்டர் வரை தெளிவாக வாகனங்கள் தெரிகிறது. இந்த தூரம் எதிர்காலத்தில் குறைய வாய்ப்புள்ளது.

Trending News

Latest News

You May Like