1. Home
  2. தமிழ்நாடு

டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் நஷ்டம் நஷ்டத்தில் விற்கப்படுகிறதாம்..!

1

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை டீசல் விலையில் பெரிது மாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரும் இடைத்தேர்தலை எதிர்கொள்ள மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை 10 முதல் 11 ரூபாய் வரை குறைக்கும் என கணிப்புகள் வந்தாலும் அதுவும் இனி நடக்காது என தெரிய வருகிறது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல், டீசல் விற்பனையில் ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் அளவிலான நஷ்டம் ஏற்படுகிறது அதிகாரிகள் என தெரிவித்துள்ளனர். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று நிறுவனங்களும் பெட்ரோல் டீசல் விலையை இரண்டு வருடங்களாக மாற்றவில்லை.

செலவு அதிகமாக இருக்கும் போது நஷ்டமும் மூலப்பொருளின் விலை குறைவாக இருக்கும் போது லாபமும் ஏற்படுவதால் இதனை சமம் செய்யும் பொருட்டு டீசல் விலையில் ஏற்ற இறக்கம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கும் வேளையில் டீசல் லிட்டருக்கு ரூபாய் 3 நஷ்டத்தையும், பெட்ரோல் வெறும் 3-4 ரூபாய் லாபத்தில் விற்கப்படுகிறது. தேர்தலுக்குப் பின்பு பெட்ரோல் டீசல் விலை உயர அதிக வாய்ப்பு உள்ளது.

Trending News

Latest News

You May Like