நாளை முதல் டெல்லி மாநிலத்திற்குள் டீசல் பேருந்துகள் நுழைய தடை..!
அதிகளவில் ஏற்படும் காற்று மாசுபாட்டை தடுக்கும் வகையில் டெல்லி மாநிலத்திற்குள் BS-6 வகை டீசல் என்ஜின்களைக் கொண்ட மின்சாரம் அல்லாத பேருந்துகள் நுழைய தடை என டெல்லி போக்குவரத்துத் துறை சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நடைமுறை மாநிலம் முழுவதும் நவ.1 லிருந்து நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அனைத்து தனியார் மற்றும் மாநில பொதுத்துறை பேருந்துகளுக்கும் பொருந்தும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினையும் மீறி டீசல் பேருந்துகள் மாநிலத்திற்குள் நுழைந்தால் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது போக, அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் தனியார் பேருந்து நிறுத்துமிடங்களில் சோதனை நடத்தப்பட்டு விதிமுறைகள் மீறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.