1. Home
  2. தமிழ்நாடு

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? 17 ஆண்டுகளுக்குப் பின் லாபம் பார்த்த BSNL..!

1

கடந்த 2007ஆம் ஆண்டுக்கு பிறகு BSNL நிறுவனம் தொடர்ந்து இழப்புகளை சந்தித்து வந்தது. இந்நிலையில் அண்மையில் BSNL நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் அதிகம் செல்லத் தொடங்கிய நிலையில், 3ஆவது காலாண்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 3 ஆவது காலாண்டு லாபம் ரூ.262 கோடி என்று கூறப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் மொபைல் சேவைகளின் வளர்ச்சி 15% ஆகவும், இணையதள சேவை வருவாய் 18%-ம் உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் BSNL-ல் 4G சேவையை மேம்படுத்த ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா BSNL நிறுவனத்திற்கு இது குறிப்பிடத்தக்க திருப்புமுனை என்று பாராட்டினார். BSNL நிறுவனம் தொடர்ந்து தனது சேவையை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதோடு செலவு குறைப்பு நடவடிக்கைகளையும் சேர்த்து செய்ததால் வாடிக்கையாளரின் அதிகரிப்பு பிஎஸ்என்எல்-க்கு ஒரு நல்ல மாற்றமாக அமைந்தது.

மொபிலிட்டி, ஃபைபர்-டு-தி-ஹோம் (FTTH) மற்றும் குத்தகைக்கு விடப்பட்ட லைன் சேவைகள் ஆகியவற்றில் கடந்த ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 14 முதல் 18% அதிக வருவாய் வளர்ச்சியை BSNL இந்த காலாண்டில் கண்டுள்ளது. அதேபோல பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை ஜூன் மாதத்தில் 8.4 கோடியாக இருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை டிசம்பர் மாதம் 9 கோடியாக உயர்ந்தது. 2024 முதல் 2025-ஆம் நிதியாண்டின் 3-வது காலாண்டில், 2007-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக காலாண்டு அடிப்படையில் அதிக லாபம் பதிவாகியுள்ளதாக ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.

கூடுதலாக BSNL-இன் நிதிச் செலவுகள் மற்றும் ஒத்துமொத்த செலவினங்களும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ. 1800 கோடிக்கும் மேல் செலவுகள் குறைந்தது. அதோடு நிறுவனத்தின் EBITDA என்று சொல்லப்படும் வட்டி, வரி, தேய்மானம், மற்றும் கடன் தொகைக்கு முந்தைய வருவாய் ஆகியவை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இரட்டிப்பாகி 2024-ஆம் நிதியாண்டில் ரூ. 2100 கோடியை எட்டியுள்ளது.

நாடு தழுவிய 4 ஜி சேவையை அறிமுகப்படுத்துவதில் BSNL தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக 1 லட்சம் டவர்களை அமைக்கவும் திட்டமிட்டிருந்தது. தற்போது இதில் 75,000 டவர்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் 60,000 டவர்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அனைத்து டவர்களையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர இலக்கு வைத்துள்ளதாகவும் சிந்தியா கூறியுள்ளார். 

Trending News

Latest News

You May Like