1. Home
  2. தமிழ்நாடு

பழைய பென்ஷன் வாக்குறுதி சொன்னீர்களே ..? என்ன ஆச்சு..? முதல்வருக்கு இ.பி.எஸ்., கேள்வி

Q

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அனைத்து தரப்பு மக்களின் பேராதரவுடன் அ.தி.மு.க., மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கோவையில் சுற்றுப் பயணத்தின் போது மக்களின் எழுச்சியே இதற்கு சாட்சி.

அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது. மின்கட்டணம், வரி உயர்வு, நிர்வாக சீர்கேட்டால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் தி.மு.க., அரசு மீது கோபமாக உள்ளது.

தமிழகத்தில் இருண்ட காலத்தை மாற்றி பொற்காலத்தை மீட்டு தருவேன். 2026 சட்டசபைத் தேர்தலில், ஸ்டாலின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். தமிழக மக்கள் தலைமையில் கடனை சுமத்தியது தான் ஸ்டாலினின் சாதனை. இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like