இந்த 7 ராசிக்காரர்கள் டேட்டிங்கை அதிகம் விரும்புகிறாங்கனு தெரியுமா?

மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்கள் இயற்கையாகவே மிகவும் ஈர்ப்புத் தன்மை மிக்க மனிதர்களாகவே இருக்கின்றனர். தங்களின் குணங்கள் மூலம் அனைவரையும் தன் வசப்படுத்தும் ஆற்றல் படைத்தவர்களாக மேஷ ராசிக் காரர்கள் திகழ்கிறார்கள்.மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசி பழக நினைப்பவர்கள் அவர்களுக்கு உண்மையில் ஒருத்தரைப் பிடித்திருந்தால் நேரடியாகச் சென்று எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது என்று நேரடியாகப் பேசி பழகுபவர்கள்.
உங்களுக்கு மேஷராசிக்காரர்கள் பிடித்திருந்தால் தயக்கமே வேண்டாம் நேரடியாகச் சென்று உங்கள் காதலை வெளிப்படுத்தி உங்கள் மனதில் பட்டதைக் கூற தயங்க வேண்டாம். மேஷ ராசிக் காரர்கள் மிகவும் தைரியசாலிகள் ஆகும். எந்த சூழ்நிலையிலும் எதிர்கொள்பவராக இருக்கின்றனர். அவர்களும் காதல் டேட்டிங் போன்ற விஷயத்தில் ஈடுபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்கள் தங்களின் முடிவை அவர்களே எடுத்துக் கொள்வார்கள் ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா அவர்கள் பேச்சை அவர்களே கேட்க மாட்டார்கள்.மற்றவர்களுடன் பேசவேண்டும் பழகவேண்டும் காதலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அதிகம் விரும்புவார்கள். எனவே ரிஷப ராசிக்காரர்கள் உங்களுக்கு ஏற்றார் போல் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
சிம்ம ராசி
சிம்மராசி காரர்கள் கம்பீரமான தோற்றமும், எதற்கும் அஞ்சாத குணாதிசயம் கொண்டவராக இருப்பார்கள்.அவர்கள் பெரும்பாலும் பல விஷயங்களில் பல பேருடன் கலந்து பழக வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இருப்பார்கள். அவர்களும் காதல் மற்றும் டேட்டிங் செல்வதில் நல்ல ஈடுபாட்டுடன் இருப்பார்கள். அழகாக உடைகள் அணிந்து கொள்ள வேண்டும். மற்றவர்களைக் கவர வேண்டும் என்ற எண்ண ஓட்டத்துடன் இருப்பார்கள்.உங்களுக்குத் தெரிந்த சிம்ம ராசிக்காரர்கள் என்றால் இப்பொழுதே அவருடன் டேட்டிங் செல்ல ஒரு தேதியைத் தயார் செய்து கொள்ளுங்கள்.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்கள் ஆழமான காதலை அதிகம் விரும்புபவராக இருக்கின்றனர். இவர்கள் இயற்கையாகவே காதலிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர்கள் ஆக வாழ்ந்துள்ளனர்.அவர்களின் காதல் அதிக நாட்கள் நீடிக்கும் என்று நம்புகிறார். அழகாக இருக்கிறார்கள். அனைவருடனும் பழக வேண்டும் என்ற எண்ணத்தை இயற்கையாகவே கொண்டுள்ளனர். தெரியாத மனிதர் உடனும் சுலபமாகப் பழகி நட்பாக மாற்றிக்கொள்வார்கள். காதலிப்பது டேட்டிங் போவது போன்றவற்றை விரும்புவார்கள்.
மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்கள் பொதுவாகவே வெளியில் செல்ல வேண்டும் எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும். பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொண்டே செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். அனைவருடனும் சுலபமாகப் பழக கற்றுக் கொள்வார்கள். அவர்களிடம் பேசி பழகி நட்பாகி காதலாவது மிகவும் சுலபமான காரியம். பழக இயல்பான எளிதான மனிதர்களாக இருப்பார்கள். தன்னை சுற்றி எப்பொழுதும் நண்பர்கள் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்பவர்கள். இவர்களும் நீங்கள் நினைத்தது போல் காதல் செய்வதே டேட்டிங் செய்வதில் விருப்பம் உள்ளவர்களாகவே இருப்பார்கள்.
துலாம் ராசி
துலாம் ராசிக் காரர்கள் பொதுவாகவே சிங்கிளாக இருக்க விரும்பவே மாட்டார்கள். அவர்கள் எப்பொழுதும் தன்னை சுற்றி ஒரு நட்பு வளையத்தை உருவாக்கிக் கொண்டு. நட்புடனே அனைவரிடமும் பழகி வருகின்றனர்.காதலை வளர்த்துக் கொள்ளக் கூடிய சக்தி அவர்களிடம் உள்ளது. மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசி பழகும் குணங்களைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.பெரும்பாலும் வெளி இடங்களிலேயே தங்கள் நேரத்தை அதிகம் செலவிட வேண்டும் என்று கருதுபவர்கள்.
சில சமயம் தானாகவே முடிவு எடுக்கத் தயங்குவார்கள். பெரும்பாலும் சில முடிவுகள் எடுக்க தங்கள் நண்பர்களையே அவர் அணுகுவார்கள்.திருமணம் காதல் போன்ற விஷயங்களுக்கு நண்பர்களின் அறிவுரையைக் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். இருந்தாலும் இவர்கள் காதல் டேட்டிங் போன்று விஷயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
கும்ப ராசி
கும்ப ராசிக்காரர்கள் தங்களுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவம் தங்களிடம் பழகுபவர்களுக்கும் கொடுக்க விருப்பப்படுவார்கள். தங்களின் துணையை தனக்கு ஈடாக நினைத்து மரியாதை கொடுக்க வல்லவர்கள். அவர்களும் காதலிப்பது டேட்டிங் செல்வது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நபராகத் திகழ்கின்றனர்.