1. Home
  2. தமிழ்நாடு

நம்மூரில் விநாயகர் சதுர்த்தி 10 நாட்கள் கொண்டாடும் பழக்கம் உள்ளது தெரியுமா ?

1

இந்துக்களின் வழிபாட்டு முறையின்படி விநாயகப் பெருமானே முதன்மையான கடவுளாக வணங்கப்படுகிறார். விநாயகரை வழிபட்டு எந்த ஒரு காரியத்தை துவங்கினாலும் அது வெற்றிகரமாகவும், எந்த விதமான தடையும் இல்லாமல் முடியும் என்பது நம்பிக்கை. இதனால் எந்த ஒரு நல்ல காரியம் மற்றும் புதிய பணிகளை துவங்குவதாக இருந்தாலும் விநாயகரை வழிபட்ட பிறகே துவங்குவது வழக்கம். 

சதுர்த்தி திதியில் விரதம் இருந்து விநாயகரை வழிபடுபவர்களுக்கு எந்த துன்பமும் ஏற்படாது என்பது பக்தர்களின் நம்பிக்கை. விநாயகர் அவதரித்த ஆவணி மாத சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி தினமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாள் சில இடங்களில் 10 நாள் உற்சவமாக வழிபடப்படுவதற்கு என்ன காரணம், இந்த 10 நாட்களும் விநாயகரை எப்படி வழிபட வேண்டும் என்பதை தெரிந்த கொள்வோம்.

வட இந்தியா உள்ளிட்ட சில பகுதிகளில் வீடுகளிலும், கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாள் உற்சவமாக கொண்டாடப்படுவது வழக்கம். விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது துவங்கி, கரைக்கும் வரை தினசரி பூஜைகள் நடத்தப்படும். எதற்காக இந்த 10 நாட்கள் கொண்டாட்டம்? இந்த 10 நாட்களும் விநாயகரை எப்படி வழிபட வேண்டும் என இங்கு தெரிந்து கொள்ளலாம்.

முதல் நாளில் விநாயகர் சிலையை வாங்கி வந்து வீட்டில் பிரதிஷ்டை செய்து, விநாயகரை வீட்டிற்கு அழைக்க வேண்டும். இந்த நாளில் பல வடிவங்களில், பல வண்ணங்களில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படும். நல்ல நேரம் பார்த்து வீட்டில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து, விநாயகரை அழைப்பது முதல் விநாயகர் சதுர்த்தி உற்சவங்கள் கொண்டாடப்படுகிறது.

இரண்டாம் நாள் :

விநாயகர் சதுர்த்தியின் முக்கியமான நாள் இது தான். சதுர்த்தி திதியான இந்த நாளை தான் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாட வேண்டும்.

மூன்றாம் நாள் :

மூன்றாம் நாளில் விநாயகருக்கு சிறப்பு நைவேத்தியங்கள் படைத்து, ஆரத்தி காட்டி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட வேண்டும்.

நான்காம் நாள் :​

இந்த நாளில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும். இந்த நாளில் பஜனைகள் நடத்தி விநாயகரை கொண்டாடி, மகிழ்விக்க வேண்டும். இந்த நாளில் இனிப்புகள் மற்றும் நைவேத்தியங்கள் படைத்து அனைவருக்கும் வழங்க வேண்டும்.

ஐந்தாம் நாள் :

ஐந்தாம் நாளில் விநாயகருக்கு ஷோடஷோபசர் பூஜை செய்யப்பட வேண்டும். இது விநாயகர் சதுர்த்தி உற்சவத்தின் மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது.

ஆறாம் நாள் :

ஆறாம் நாள் சஷ்டி திதியன்று விநாயகருக்கு சிறப்பான பூஜைகள் செய்ய வேண்டும். இதை கசேஷ சஷ்டி என்று குறிப்பிடுவதுண்டு. வீட்டில் பிரதிஷ்டை செய்த விநாயகருக்கு தூப தீப ஆராதனை காட்ட வேண்டும். இந்த நாளில் தானம் கொடுப்பது மிக முக்கியமானதாகும்.

​ஏழாம் நாள் :

ஏழாம் நாளில், விநாயகருக்கு சப்தபதி பூஜைகள் செய்யப்பட வேண்டும். இந்த நாளில் சிறப்பான பூஜைகள் செய்து வழிபட வேண்டும்.

எட்டாம் நாள் :

எட்டாம் நாள் அஷ்டமி திதி அன்று சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் செய்து விநாயருக்கு விருப்பமான இனிப்புகளை நைவேத்தியமாக படைக்க வேண்டும். அவருக்கு விருப்பமான மோதகம் உள்ளிட்டவைகளை படைத்து வழிபட வேண்டும்.

ஒன்பதாம் நாள் :

ஒன்பதாம் நாளில் நவபத்ரிகா பூஜை நடத்த வேண்டும். இது நவகிரகங்களுக்கான பூஜையாகும். இதனால் நவகிரக தோஷம் இருந்தால் விநாயகர் அதை விலக்கி விடுவார் என்பது நம்பிக்கை.

பத்தாம் நாள் :

பத்தாவதும், உற்சவத்தின் கடைசி நாளுமான இந்த நாளில் வீட்டில் வைக்கப்பட்ட விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். இது விநாகரை சந்தோஷமாக பக்தர்கள் வழியனுப்பி வைக்கும் நாளாகும். பல விதமான பாடல்கள் பாடி, ஆட்டம் பாட்டத்துடன் விநாயகர் ஊர்வலம் நடைபெறும். இந்த நாளில் தானம் கொடுப்பது உள்ளிட்டவைகள் சிறப்புக்குரியதாகும்.

Trending News

Latest News

You May Like