1. Home
  2. தமிழ்நாடு

இது தெரியுமா ?பெண்களுக்கென பிரத்யேகமாக `பிங்க்' வாக்குச்சாவடி..!

Q

தேர்தலைக் கொண்டாட ஒட்டுமொத்த தமிழகமும் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்டம்தோறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில்,  பெண்களுக்கு வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பிரத்யேக 'பிங்க்' வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.அனைத்து அலுவலர்களும், ஊழியர்களும், போலீசாரும் பெண்களாக மட்டுமே நியமனம்

அனைவரும் பிங்க் வண்ண உடைகளை அணிந்து பணியாற்ற உள்ளனர்

கர்ப்பிணிகள், கைக்குழந்தை வைத்துள்ளவர்கள், முதியோருக்கு தனித்தனி வரிசை.

மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன்  கூறியதாவது: சென்னை மாவட்டத்தில் உள்ள 3,726 வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அனைத்து வாக்கு சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா பொருத்துதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் வியாழக்கிழமை மாலைக்குள் நிறைவுபெறும்.

மகளிருக்கு பிரத்யேக வாக்குச்சாவடி: இதனிடையே, பிங்க் வாக்குச்சாவடி என முழுவதுமாக பெண்கள் வாக்களிக்கும் வகையில் சென்னை முழுவதும் 16 பேரவை தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி என 16 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இந்த சாவடிகளில் அனைத்து அலுவலர்களும் பெண்களாக இருப்பார்கள் என்றார்.

Trending News

Latest News

You May Like