1. Home
  2. தமிழ்நாடு

பேருந்துகளில் சில்லறை வாங்க மறந்துடீங்களா..! இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க போதும்..!

1

தமிழகத்தில் போக்குவரத்து சேவையில் முக்கிய பங்கு வகிக்கிறது பேருந்து சேவை. நகர் பேருந்து, மாவட்ட பேருந்து, மாநில பேருந்து என பல்வேறு பேருந்து சேவைகள் இயக்கி தினமும் வேலைக்கு செல்பவர்கள் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் மற்ற மாவட்டங்களுக்கு செல்பவர்கள் என பல லட்சம் மக்கள் பயனடைகின்றனர்.இதிலும் தற்போதுள்ள அரசு சார்பில் மகளிருக்காக இலவச பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.இப்படி பேருந்தில் பயணிக்கும் போது பேருந்தில் நடத்துனரிடம் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கிய பிறகு சில்லறை இல்லாததால் நடத்துனர் பிறகு தருகிறேன் என்று கூறி நாம் மீதி சில்லறை வாங்காமல் இறங்கும் இடம் வந்த உடன் மறந்து இறங்கி செல்வது பயணிகள் அனைவருக்கும் நடக்கும் ஒன்றாக உள்ளது.


இந்நிலையில், தமிழ்நாடு அரசு பேருந்துகளில் சில்லறை வாங்குவது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. 

அதன்படி Toll Free எண் 1800 599 1500ஐ தொடர்பு கொண்டு உங்கள் பயணச்சீட்டு விவரங்களை தெரிவித்து சில்லறைகளை UPI மூலமாக பெற்றுக்கொள்ளலாம். UNIFIED PAYMENTS INTERFACE வழியாக இந்த சில்லறை உங்களுக்கு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Trending News

Latest News

You May Like