1. Home
  2. தமிழ்நாடு

தேர்தல் காலத்தில் வருமான வரித்துறை இத்தனை கோடி மதிப்புள்ள நகை மற்றும் பணம் பறிமுதல் செய்ததா ?

1

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 16-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதனையடுத்து வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

பணம் சட்டவிரோதமாக கடத்தப்படுவதை தடுக்க அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டன. தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்படுவதுடன், அதிகளவில் பணம் மற்றும் தங்கம் பறிமுதல் குறித்து பறக்கும் படையினர் வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவித்தன.

இந்நிலையில், நேற்று முன்தினம் 30-ம் தேதி வரை தேர்தல் காலத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.1,100 கோடி ரொக்கம் மற்றும் தங்கம் நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட பட்டியலில் டெல்லி மற்றும் கர்நாடக மாநிலங்கள் முதலிடத்தை பகிர்ந்து கொண்டு உள்ளன. அங்கு ரூ. 200 கோடி பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அடுத்து 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது. 150 கோடி ரூபாய் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ஆந்திரா, ஒடிசா மற்றும் தெலுங்கானாவில் ரூ.100 கோடி அளவு பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் காலத்தில் இந்தளவு பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும். கடந்த 2019-ம் ஆண்டை காட்டிலும் 182 சதவீதம் கூடுதல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2019-ல் ரூ. 390 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like