1. Home
  2. தமிழ்நாடு

"4 படம் ஓடினா CM-ஆ" தவெக தலைவர் விஜய்யை தாக்கி பேசினாரா செல்லூர் ராஜூ..?

1

மதுரையில் அ.தி.மு.க., 53 வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லுார் கே.ராஜூ பேசினார்.

நான்கு படம் ஓடிவிட்டால் நான் தான் தமிழக முதல்வர் எனக்கூறி சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வரத் துடிக்கின்றனர்.
 

வரிக்குதிரையைவிட அதிக வரிகளை மக்கள் மீது தமிழக அரசு போட்டு உயர்த்தியுள்ளது. தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது. மின் கட்டணத்தை 3 முறை உயர்த்தியுள்ளனர்.தி.மு.க., ஆட்சியா நடக்கிறது; காட்சிதான் நடக்கிறது.
 

ராமநாதபுரத்தை சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளி உலக கோப்பையை வென்றதாகக்கூறி முதல்வர், துணை முதல்வரை ஏமாற்றி சென்னையில் போட்டோ எடுத்துள்ளார். அதை நம்பி இருவரும் போஸ் கொடுத்துள்ளனர்.

இதையே கண்டுபிடிக்க முடியாமல் ஆட்சி செய்யும் நீங்கள், எப்படி நல்லாட்சியை கொடுப்பீர்கள்.தி.மு.க.,அரசு கமிஷன் அரசாக உள்ளது. மக்கள், டாக்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை.
 

மதுரையில் கோரிப்பாளையம் உட்பட பல இடங்களில் பாலங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது அ.தி.மு.க., ஆட்சியில்தான்.
 

முல்லை நகர் பகுதியில் 500 வீடுகளை இடிக்க நினைக்கிறார்கள். அதில் நாங்கள் அரசியல் செய்யவில்லை; அவியலும் செய்யவில்லை.
 

ஏழைகளுக்கு உதவி செய்வதே அ.தி.மு.க.,வின் நோக்கம் என்றார். முன்னதாக மாவட்ட பொருளாளர் குமார் தலைமை வகித்தார். நடிகை காயத்ரி ரகுராம், நிர்வாகிகள் பங்கேற்றனர்.


 


 

Trending News

Latest News

You May Like