அமைச்சர் உதயநிதி முதலில் முட்டை வந்ததா? இல்லை கோழி முதலில் வந்ததா ? என்று சொல்லட்டும் : அண்ணாமலை

அரசியலை பொறுத்தவரைக்கு ஒரு கட்சியில் இரண்டு விதத்தில் வளர்ச்சி வளர்ச்சி நடக்கும். பா.ஜ.க. வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கிறது. ஒரு கொடி கம்பத்தை மறைப்பதால் கல்யாணம் நின்று விடுமா? கல்யாணம் நடக்கத் தான் போகிறது.
ஒரு சீப்பை ஒழித்து வைத்து விட்டால் கல்யாணம் நின்று விடும் என நினைக்கிறார்கள். எத்தனை இடங்களில் தி.மு.க கொடி கம்பங்களுக்கு அனுமதி தந்துள்ளனர்?. மக்களுக்கு தொல்லை ஏற்படும் வகையில் தான் கொடி கம்பங்கள் வைக்கக் கூடாது.
ஏதாவது ஒரு குழந்தை நீட் தேர்வுக்கு எதிராக இருக்கிறதா?. யாருமே நீட் தேர்வுக்கு எதிராக கிடையாது. 2016-ல் இருந்து இதனை வைத்து தி.மு.க அரசியல் செய்து வருகிறது. ஒரு முட்டை கொண்டு வந்து, நீட்டுக்கான ரகசியம் என உதயநிதி சொல்கிறார்.
நீட்டுக்கான ரகசியம் முட்டையா?. முதலில் முட்டை முதலில் வந்ததா? கோழி முதலில் வந்ததா? என அமைச்சர் உதயநிதி சொல்லட்டும். அதன் பிறகு நீட் ரகசியத்தை சொல்லட்டும். தமிழக மக்கள் நீட்டை ஏற்று கொண்டார்கள்.
உதயநிதி போன்றவர்கள் குழந்தைகளும் படிக்க கூடாது என்று நினைக்கிறார்கள். மக்களை படிக்க விடக் கூடாது என்று நினைப்பதால் தான் தமிழகம் கல்வியில் பின்தங்கி உள்ளது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.