விஜய்யை மறைமுகமாகத் தாக்கிப் பேசினாரா அமைச்சர் அன்பரசன்..?
சென்னை அடுத்த ஐயப்பன்தாங்கலில் திமுக கட்சிக்குப் புதிய இளைஞர்கள் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாகக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் பங்கேற்று புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து மேடையில் பேசினார். மேலும் கட்சி எவ்வாறு பலப்படுத்த வேண்டும் என நிர்வாகிகள் தொண்டர்களுக்கு இளைஞர் அணியைச் சேர்ந்தவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் தா.மோ.அன்பரசன் மேடை பேச்சு
கட்சியில் சேர்க்கும் இளைஞர்கள் 20 %சதவீதம் புது ஆளாக இருக்க வேண்டும்.புதிய ஆளாகவும் மற்றும் அதும் மாற்று கட்சியினராக இருக்க வேண்டும், புது வரவு தான் கட்சிக்கு வேண்டும்.வாழ்வோ, சாவே திமுக காரர்கள் எங்கயும் போகமாட்டார்கள் என்றும் சீமான் மற்றும் நடிகர்களை ரசிக்கலாம், அவர்களுக்கு அறிவு இருக்காது.கட்சி நடத்துவது சாதரணமா விஷயமா திமுக சந்து பொந்துல கூட இருக்கு அப்படி பட்ட கட்சியே பத்து வருஷம் நடுத்தெருவில் இருந்தது.
நடிகர்கள் முதல்வராவது MGR, ஜெயலலிதாவுடன் போச்சு என்றும் தற்போது நடிகர்கள் கூட்டம் கூடுவதை வைத்து முதல்வராகலாம் என்ற நினைக்கிறார்கள் அதெல்லாம் எடுபடாது ஆசை காட்டி மகிழ்ச்சியாகக் கனவு காண்பதுலாம் பொய் ஆக ஆக்கி நமது அமைப்பைப் பலமாக வைத்தால் எந்தத் தேர்தல் வந்தாலும் யாரு தயவு தாட்சனை இல்லாமல் நாம் வெற்றி பெறலாமெனப் பேசினார்.