1. Home
  2. தமிழ்நாடு

திமுகவின் திட்டத்தை காப்பி அடித்ததா அதிமுக ? வெளியான அதிமுக தேர்தல் அறிக்கை

Q

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பின்னர் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், மகளிருக்கு ரூ.3000 உரிமைத்தொகை, சென்னையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், நீட்டுக்கு மாற்று தேர்வு முறை உள்ளிட்டவைகள் முக்கிய வாக்குறுதிகளாக இடம் பெற்றுள்ளன.
கவர்னரை நியமிக்கும் போது முதலமைச்சரின் ஆலோசனை பெற்று ஒப்புதல் பெற வேண்டும்.
உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வலியுறுத்தப்படும்.
தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை.
தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும்
சிலிண்டர் விலையைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வலியுறுத்வோம் 
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம.

நீட் தேர்வுக்கு பதிலாக மாற்று தேர்வு முறையை கொண்டுவர வலியுறுத்தப்படும். 

 வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வேண்டும். 

பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை 3000 உரிமைத் தொகை வழங்குவோம். 

குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும்.


திமுக தேர்தல் வாக்குறுதி மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை திட்டத்திற்கு நல்ல வரவேற்பு வந்துள்ளதால், எதிர்க்கட்சியான அதிமுக இந்த திட்டத்தை காப்பி அடித்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது 

Trending News

Latest News

You May Like