1. Home
  2. தமிழ்நாடு

டிக் - டாக் தடை !! டிக் - டாக் பிரபலம் ஜி.பி முத்து கதறல்...

டிக் - டாக் தடை !! டிக் - டாக் பிரபலம் ஜி.பி முத்து கதறல்...


கடந்த சில நாட்களுக்கு முன்பு 59 சீன ஆப் - களை இந்திய அரசு தடை செய்தது. இதில் பிரபல பொழுதுபோக்கு ஆப் -களான டிக்டாக் , ஹலோ - வும் அடங்கும். இந்த டிக்டாக்கின் மூலம் வெளி உலகுக்கு பல பேர் அறிமுகமாகினர்.

இதில், ஆட்டம், பாட்டம், துக்கம், சந்தோஷம், தற்கொலை முயற்சி வரை சென்று மீண்டு வந்தவர்கள் இன்னும் ஏராளம். அதேபோல, டிக்டாக் மட்டும் இல்லையென்றால், இவர்கள் எல்லாம் இவ்வளவு ஃபேமஸ் ஆகியிருப்பார்களா என்றும் தெரியாது.

இதை பற்றி ரவுடி பேபி சூர்யா கருத்து சொல்லும் போது ; நம்ம நாட்டுக்காக தடை பண்ண டிக்டாக்கால் தனக்கு மகிழ்ச்சி தான் என்று கூறியிருந்தார். அந்த வகையில், எளிய, யதார்த்த பேச்சால் மக்களை ஈர்த்தவர் ஜிபி முத்து.

இவரை பொறுத்தவரை, தன்னுடைய மரக்கடை பிசினஸே இவருக்கு 2 வது தான்..முதலில் டிக்டாக். அந்த டிக்டாக்கும் மரக்கடையில் வைத்து தான் செய்வார். சாப்பிடுவது, தூங்குவது என ஒவ்வொரு விஷயத்தையும் டிக்டாக் போட்டு வந்த இவர் தற்போது சோகமே வடிவாக காணப்படுகிறார்.

இப்போது டிக்டாக் தடை குறித்து ஒரு வீடியோ வெளியிட்டு, அதில் பிரதமருக்கு ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார். அதில் அவர் சொல்லி உள்ளதாவது: "இந்த பதிவு யாருக்குன்னா, இந்திய நாட்டின் பிரதமர் ஐயா மோடி அவர்களே, நான் சொல்றேன் கேளுங்க.

இந்த டிக்டாக்கை ஓபன் பண்ணுங்க எனக்கு மனநிலை சரியில்லாமல் போயிட்டு இருக்கு. என்னன்னே தெரியல, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. எப்படியாவது இந்த டிக்டாக்கை ஓபன் பண்ணுங்க.. ஒன்னுமே சரியல்லை பார்த்துக்கிடுங்க. ஐயா மோடி அவர்களே தாழ்மையா கேட்டுக்கறேன் என்று சோகத்துடன் புலம்பி உள்ளர் ஜிபி முத்து. 

Newstm.in

Trending News

Latest News

You May Like