"தோனி அணிக்கு திரும்புவது எளிதல்ல" : முன்னாள் இந்திய கேப்டன் கருத்து!

"தோனி அணிக்கு திரும்புவது எளிதல்ல" : முன்னாள் இந்திய கேப்டன் கருத்து!

தோனி அணிக்கு திரும்புவது எளிதல்ல : முன்னாள் இந்திய கேப்டன் கருத்து!
X

தோனி இந்திய அணிக்கு திரும்புவது அவ்வளவு எளிதானதாக தோன்றவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதின் கருத்து தெரிவித்துள்ளார்.

2019 உலகக் கோப்பை அரையிறுதிக்கு பின்பு எம்.எஸ்.தோனி, இந்தியா சார்பில் சர்வதேசப் போட்டிகளில் கலந்துக்கொள்ளவில்லை. ஐபிஎல் போட்டிகளும் நடைபெறாததால் தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் தோனி வருகை குறித்து அசாருதீன் கருத்து தெரிவித்துள்ளார் . அதில், தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கடினம்தான் என்றும், அப்படியே திருபம்புவதாக இருந்தாலும் தேர்வாளர்கள் அவருடைய திறனை பரிசோதிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். ஏனென்றால் தோனி கிரிக்கெட் விளையாடி பல மாதங்கள் ஆகிறது என்றும், எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் கிரிக்கெட் தொடர்ந்து விளையாட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். 

newstm.in

Next Story
Share it