சாகும் வரை உண்ணாவிரதம் – தருமபுரம் ஆதீனம் எச்சரிக்கை!
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தின் 24 ஆவது மடாதிபதி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு 25 ஆவது மடாதிபதி காலத்தில் மகப்பேறு மருத்துவமனை திறக்கப்பட்டது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கட்டடம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு சர்ச்சை எழுந்தது.
தற்போது அந்த இடத்தில் நகராட்சி அலுவலகம் கட்டுவதற்காக பூமி பூஜை நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது. இதை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தருமபுரம் ஆதீனத்தின் 27 ஆவது மடாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
.png)