தனுஷின் NEEK ட்ரைலர் வெளியானது..!

நடிகர் தனுஷ், ‘பவர் பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். அடுத்து அவர் இயக்கிய ‘ராயன்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. இந்தப் படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் 3-ஆவதாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படத்துக்கு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
இதில், தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளர்.
காதலர் தின ஸ்பெஷலாக இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பிப்ரவரி 21ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரியங்கா மோகன், கோல்டன் ஸ்பேரோ பாடலுக்கு ஸ்பெஷல் அப்பியரன்ஸாக வந்து ஆட்டம் போட்டு உள்ள நிலையில், தனுஷும் காதல் ஃபெயில் என்கிற பாடலில் ஸ்பெஷல் அப்பியரன்ஸ் கொடுத்துள்ளார். டீன் ஏஜ் பருவ மாணவர்களின் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் ட்ரைலர் சற்று முன் வெளியானது.