மாஸாக வெளியான தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ டீஸர்..!

‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’. பீரியட் படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு டீசர் வெளியாகும் நேரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த டீசர் நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இதோ அந்த டீஸர் உங்களுக்காக...
Respect is Freedom!
— Sathya Jyothi Films (@SathyaJyothi) July 27, 2023
Here is the much awaited #CaptainMillerTeaser 💥🔥https://t.co/NvxXHcTRDN
DECEMBER 15th 2023 in THEATRES@dhanushkraja @ArunMatheswaran @NimmaShivanna @sundeepkishan @priyankaamohan @gvprakash @dhilipaction @saregamasouth