1. Home
  2. தமிழ்நாடு

தனுஷ் - நாகார்ஜூனா நடிப்பில் வெளியாகவுள்ள ‘குபேரா’ படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கிய பிரபல நடிகர்..!

1

இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்தில் நடித்துள்ளார்.

இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ நேரடி தெலுங்கு படமாகும்.இந்த படத்தில் தனுஷ் 'தேவா'என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், மும்பை தாராவியை மையமாக வைத்து அரசியல் திரில்லர் ஜானரில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை நிகேத் பொம்மிரெட்டிம், படத்தொகுப்பை கார்த்திகா ஸ்ரீனிவாசும் செய்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் தனுஷின் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழுவினர் புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், மலையாள பட உலகில் பிரபல நடிகரும், முன்னனி நடிகர் மம்முட்டியின் மகனுமாக நடிகர் துல்கர் சல்மான் குபேரா படத்தின் கேரளா வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, துல்கர் சல்மான் தனது தயாரிப்பு நிறுவனமான 'வே பாரர் பிலிம்ஸ்' என்ற நிறுவனம் ‘குபேரா’ படத்தினை கேரளாவில் வரும் ஜூன் 20-ம்தேதி வெளியிட உள்ளது. கேரள பட உரிமையை துல்கர் சல்மான் வாங்கியுள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Trending News

Latest News

You May Like