1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் சங்க கட்டிடத்திற்கு நடிகர் தனுஷ் 1 கோடி நிதியுதவி!

Q

பொருளாதாரப் பிரச்சினையால் தடைபட்ட தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடப் பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் பூஜையுடன் தொடங்கியது. தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக முன்பு கணக்கிடப்பட்டது.இதற்காக நடிகர்கள் கமல், விஜய், உதயநிதி ஆகியோர் ரூ. 1 கோடி வைப்புநிதியாக முன்பு வழங்கினர். நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 50 லட்சம் வழங்கினார். இன்று நடிகர் தனுஷ் ரூ. 1 கோடி வழங்கியுள்ளார்.

இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. புதிய கட்டிடப் பணிகளைத் தொடர்வதற்காக சங்கத்தின் வைப்புநிதியாக ரூ. 1 கோடியை தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி முருகன் ஆகியோரிடம் தனுஷ் வழங்கினார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like