1. Home
  2. தமிழ்நாடு

ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை - தனுஷ்..!

1

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்தனர். இருபது ஆண்டுக் காலம் ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிவதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூகவலைதளத்தில் அறிவித்தார்கள். பின்பு, விவாகரத்துக் கோரி இருவரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இருவரிடமும் சமாதானப் பேச்சு வார்த்தையை இருதரப்பு குடும்பமும் முன்னெடுத்ததாகவும் ஆனால் இருவரும் தங்கள் முடிவில் உறுதியாக இருக்கின்றனர் என்றும் தகவல் வெளியானது.

விவாகரத்து வழக்கு முன்பு இரண்டு முறை சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இருவரும் ஆஜராகவில்லை. இப்போது இருவரும் நீதிமன்றத்திற்கு வந்திருக்கின்றனர். நீதிபதி சுபாதேவி முன்பு நடத்தப்பட்ட இந்த விசாரணையில் நீதிமன்ற கதவுகள் மூடப்பட்டு ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. சேர்ந்து வாழ விருப்பம் இல்லை எனவும் பிரிவதில் இருவரும் உறுதியாக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து வழக்கு விசாரணை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like