1. Home
  2. தமிழ்நாடு

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பதில் கொடுத்த டிஜிபி சைலேந்திர பாபு..!!

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பதில் கொடுத்த டிஜிபி சைலேந்திர பாபு..!!


தமிழ்நாடு டிஜிபி சைக்கிள் பயணம் மட்டுமே மேற்கொள்கிறார் என அண்ணாமலை விமர்சித்த நிலையில், “போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும். நல்ல பழக்கங்களை கைவிட இயலாது. நல்லதைச் செய்வோம், நல்லதையே சொல்லுவோம்” என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஹெல்மெட் போடுவதன் அவசியத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தான் பேசிய வீடியோவை வெளியிட்ட சைலேந்திர பாபு, அதற்கு இந்த கேப்ஷனை போட்டிருந்தார்.

முன்னதாக, “திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கட்டுப்பாட்டில் தான் தமிழ்நாடு காவல்துறை செயல்பட்டு வருகிறது, டிஜிபி சைலேந்திர பாபு கட்டுப்பாட்டில் எதுவுமில்லை. இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவதற்கும், செல்பி எடுப்பதற்கும் தான் டிஜிபி பதவி உள்ளது. வெளிப்படையாகவே சொல்கிறேன், தற்போதைய டிஜிபியின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை. திமுக அந்தந்த மாவட்டச் செயாளர்களின் கட்டுப்பாட்டிலும், ஐடி விங் கட்டுப்பாட்டிலும் தான் காவல்துறை உள்ளது” என அண்ணாமலை விமர்சித்திருந்தார்.

திமுக என்ற பெரு வணிக நிறுவனத்தின் திட்டங்களை செயல்படுத்தும் ஏவல்துறையாக காவல்துறை மாறியுள்ளது. பாஜக உறுப்பினர் கல்யாண ராமன், மாரிதாஸ், கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் ஷிபின் ஷார்ப்பா ஆகியோரின் கைதுக்குப் பின்னால் திமுக நிர்வாகிகள் தான் உள்ளனர்.

திமுக நிர்வாகிகள் காவல்துறை துணை கண்காணிப்பாளரைக் கட்டுப்படுத்தி வருகின்றனர். டிஜிபி, சுகாதார செயலாளர் போன்ற தமிழ்நாட்டில் உயர் அதிகாரிகள் கோபாலபுரத்து அடிமைகளாக மாறியுள்ளனர். வரும் ஆறு மாதங்களில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலையும் நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like