1. Home
  2. தமிழ்நாடு

8 ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ள சந்தன மாரியம்மன் கோயிலை திறக்க பக்தரகள் வலியுறுத்தல்!

1

திருவாடானை அருகே 8 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருக்கும் சந்தன மாரியம்மன் கோயிலை திறக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

தொண்டிபுதுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள கோயிலில் சிறுவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு இரு தரப்பு மோதலாக மாறியது. இதன் காரணமாக பூட்டப்பட்ட கோயில் 8 ஆண்டுகளை கடந்தும் திறக்கப்படாமல் உள்ளது.

இது தொடர்பாக மனு அளிக்கப்பட்ட நிலையில் கோயிலை திறப்பதாக வட்டாட்சியர் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Trending News

Latest News

You May Like