வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு தடை..!

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. வெள்ளியங்கிரி மலை பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது.
இதையடுத்து, பக்தர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் எழக்கூடும் என்பதால் அங்கு மலையேற தற்காலிகமாக வனத்துறை தடை விதித்துள்ளது. ஏற்கனவே மலை ஏறிய அனைவரும் உடனடியாக கீழே இறங்க வேண்டும், மறு அறிவிப்பு வெளியிடப்படும் வரை யாரும் மலை மீதேறி செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
இதனிடையே மலை ஏறியவர்களில் 2 பேர் இன்று உயிரிழந்துள்ள விவரம் வெளியாகி இருக்கிறது. 7வது மலையில் பெண் ஒருவரும், 5வது மலையில் ஆண் ஒருவரும் உடல்நலக்குறைவால் இறந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து நடப்பாண்டில் மட்டும் வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.