1. Home
  2. தமிழ்நாடு

பக்தர்கள் அதிர்ச்சி..! திருப்பதி செல்லும் ரயில்கள் அடுத்தடுத்து ரத்து..!

1

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விழுப்புரத்தில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண். 16854), வரும் மார்ச் 14 ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் மறுமார்க்கமாக திருப்பதியிலிருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16853) வரும் மார்ச் 14 ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரக்கோணத்தில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06753) மற்றும் மறுமார்க்கமாக திருப்பதியிலிருந்து மதியம் 3.45 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06754) வரும் 10 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திருப்பதியிலிருந்து மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (06728), மறுமார்க்கமாக சென்டிரலில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (06727) ஆகியவையும் வரும் 10 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருப்பதியிலிருந்து காலை 11.55 மணிக்கு புறப்பட்டு மன்னார்குடி செல்லும் பாமணி எக்ஸ்பிரஸ் ரயில் (17407) வரும் 10, 12, 14 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மறுமார்க்கமாக மன்னார்குடியிலிருந்து காலை 5.10 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் பாமணி எக்ஸ்பிரஸ் ரயில் (17408) வரும் 11, 13, 15 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் புதுச்சேரியில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16112) வரும் 12, 23 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மறுமார்க்கமாக, திருப்பதியிலிருந்து காலை 4 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (16111) வரும் 11, 24 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளது. 

Trending News

Latest News

You May Like