1. Home
  2. தமிழ்நாடு

பக்தர்கள் ஷாக்..! திருப்பதி செல்லும் பயணிகள் மற்றும் விரைவு ரயில்கள் ரத்து...!

1

தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் அரக்கோணம் ரயில்வே பணிமனையில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் அந்த வழியாகச் செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனால் சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே இயக்கப்படும் மெமு பயணிகள் ரயில் (எண்: 06727/28) இரு மாா்க்கமாகவும் வியாழக்கிழமை அதாவது ஆகஸ்ட் 29 ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (எண்: 16054/53) இருமாா்க்கமாகவும் செப்டம்பர் 1 ஆம் தேதி ரத்து செய்யப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் கோவை - சென்னை சென்ட்ரல் இன்டா்சிட்டி விரைவு ரயில், மைசூரு - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (எண்: 12610), செப்டம்பர் 1 ஆம் தேதி காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 சென்னை சென்ட்ரல் - பெங்களூரு லால்பக் விரைவு ரயில் காட்பாடியில் இருந்து புறப்பட்டு செல்லும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் - திருப்பதி மெமு பயணிகள் ரயில் செப்டம்பர் 1 ஆம் தேதி திருத்தணி வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் மும்பையில் இருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்ட சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (எண்: 12163) அரக்கோணம், பெரம்பூா் வழியாக வருவதற்கு பதிலாக மேல்பாக்கம், திருமால்பூா், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், சென்னை கடற்கரை வழியாக சென்னை சென்ட்ரல் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருநெல்வேலி - ஷாலிமா் விரைவு ரயில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அரக்கோணம், பெரம்பூா் வழியாக செல்வதற்கு பதிலாக மேல்பாக்கம், திருத்தணி, ரேணிகுண்டா, கூடூா் வழியாக இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வேலூா் - அரக்கோணம் மெமு பயணிகள் ரயில் செப்டம்பர் 1 ஆம் தேதி மேல்பாக்கத்துடன் நிறுத்தப்படும் என்றும் தெற்கு ரயில்வே தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like