பக்தர்கள் அதிர்ச்சி..! திருச்செந்தூர் கோவில் கடலில் குளிக்க திடீர் தடை!

அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் தனி சிறப்பு உள்ளது. அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் மட்டுமே கடலோரம் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. இங்குள்ள கடலில் பக்தர்கள் புனித நீராடிவிட்டு, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருச்செந்தூரில் நடக்கும் பல்வேறு முக்கிய விழாக்களில் கந்த சஷ்டி திருவிழாவும் பிரசித்தி பெற்றது. இந்தாண்டு கந்த சஷ்டி திருவிழா நேற்று (நவ.13) கோலாகலமாக துவங்கியது.
கந்த சஷ்டி திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ள நிலையில் கடலில் புனித நீராட பக்தர்களுக்கு இன்று திடீர் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் இன்று பிற்பகல் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது