1. Home
  2. தமிழ்நாடு

பக்தர்கள் அதிர்ச்சி..! விழுப்புரம் அருகே கோவில் தேர் கவிழ்ந்து விபத்து!

1

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை அருகேயுள்ள கடையம் கிராமத்தில் பழமைவாய்ந்த சூலப்பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தூக்குதேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி கடந்த 2022 ஆண்டில் தூக்கு தேர்விழா நடைபெற்ற நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து தூக்கு தேர்விழா நேற்று தொடங்கி இன்று நடைபெற்று வருகிறது. கடையத்தில் உள்ள ஏரிக்கரை பகுதியிலிருந்து 64 அடி உயரமுள்ள 3 டன் எடை கொண்ட தூக்கு தேரினை அப்பகுதியினர் இளைஞர்கள் 300 பேர் தோளில் சுமந்தவாரு கிராமத்தினை தூக்கிவருவர்.

இந்நிலையில்பள்ளத்தெரு பகுதியில் தேரானது சரிந்து கீழே விழுந்தது. தேர் கீழே விழுந்ததில் ஐந்து நபர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டன. காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அதிர்ஷ்டவசமாக எந்த வித உயிர்சேதமும் ஏற்படவில்லை பின்னர் தேரை நிமிர்த்தி மீண்டும் தேரோட்டம் நடந்து வருகிறது.


 

Trending News

Latest News

You May Like