பக்தர்கள் அதிர்ச்சி..! கோவை மருதமலையில் ரூ.4 லட்சம் மதிப்பிலான வெள்ளி வேல் திருட்டு!

மருதமலை அடிவாரத்தில் வேல்கோட்டம் தியான மண்டபம் உள்ளது. இதில் முருகனை வேல் ரூபத்தில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
இதில் மூலவருக்கு முன்பாக சுமார் 2 ½ அடி வெள்ளியால் செய்யப்பட்ட சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான வேலினை நேற்று (02/04/25) அன்று மதியம் சுமார் 12 மணியளவில் சாமியார் வேடத்தில் வந்த திருடன் மருதமலை கும்பாபிஷேகத்திற்கு போடப்பட்டிருந்த பலத்த போலீஸ் காவலையும் மீறி திருடிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. வடவள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.