1. Home
  2. தமிழ்நாடு

பக்தர்கள் அதிர்ச்சி..! முதல்வர் தொடங்கி வைத்த ரோப்கார் சேவை ஒரே நாளில் பழுது..!

1

அய்யர்மலைக்கான ரோப் கார் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொங்கி வைத்தார். ஆரம்பித்த ஒரே நாளில் ரோப் கார் சேவை பழுதாக நின்றுள்ளது..ரோப் கார் இயங்கும் இயந்திரத்தில் உள்ள சக்கரத்தில் இருந்து கயிறு நழுவியதால் ரோப் கார் பாதியில் நின்றுள்ளது.ரோப் கார் இருபுறங்களிலும் செல்ல முடியாமல் நடுவழியில் நின்றதால் பக்தர்கள் கூச்சலிட்டனர்.
 

இதைதொடர்ந்து, கீழே இருந்து மேலே செல்லும் பெட்டியில் அமர்ந்திருந்த பக்தர்கள் ஏணி மூலம் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.பாதியில் நின்ற ரோப் காரில், 3 பெண் பக்தர்கள் வெகு நேரமாக தவித்தனர்.தொடர்ந்து, ரோப் கார் இயக்கத்தை சரி செய்யும் பணியில் ஊழியர்கள்  ஈடுபட்டு சரி செய்தனர் 

Trending News

Latest News

You May Like