பக்தர்கள் அதிர்ச்சி..! நெல்லையப்பர் கோவில் யானை உயிரிழப்பு..!

நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் யானை காந்திமதி 56, உடல் நலக்குறைவால் சிரமப்பட்டு வந்தது. இக்கோயில் விழாக்கள், தேரோட்டம் போன்ற நிகழ்வுகளில் சுவாமிக்கு முன் காந்திமதி செல்லும்.
நன்கொடையாளர்களால் 1985ல் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டது. வயது மூப்பு காரணமாக காந்திமதி உடல் எடை அதிகரிப்பு, மூட்டு வலி போன்றவற்றால் அவதிப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களாக யானை நின்றவாறே துாங்கியது. படுத்த யானையால் மீண்டும் எழ முடியவில்லை. எனவே கோயில் அதிகாரிகள், கால்நடைத்துறை டாக்டர்கள் முன்னிலையில் யானை கிரேன் பெல்ட் மூலம் கட்டி துாக்கி நிறுத்தப்பட்டது. எனினும் நிற்க முடியவில்லை.
இந்நிலையில், இன்று (ஜன.,12) நெல்லையப்பர் கோவில் யானை காந்திமதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. காந்திமதி, நெல்லை மக்களின் அன்பைப் பெற்றது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் காந்திமதி யானையை பார்க்காமல் செல்ல மாட்டார்கள். காந்திமதி யானைக்கு, அன்போடும், பாசத்தோடும் உணவுப்பொருட்களை நெல்லை மக்கள் வழங்கி வந்தனர்.