1. Home
  2. தமிழ்நாடு

பக்தர்கள் அதிர்ச்சி..! அயோத்தி கோயிலில் 3,800 விளக்குகள் திருட்டு!

1

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பால ராமர் கோவிலை கடந்த ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு தரிசனத்திற்காக செல்கின்றனர். 

இந்த நிலையில் அயோத்தியில் உள்ள ராம மற்றும் பக்தி பாதைகளில் நிறுவப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 36 புரொஜெக்டர் விளக்குகள், 3,800 மூங்கில் விளக்குகள் ஆகியவை திருடப்பட்டுள்ளன. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் ராம பாதையில் 6,400 மூங்கில் விளக்குகளும், பக்தி பாதையில் 96 புரொஜெக்டர் விளக்குகளும் நிறுவப்பட்டிருந்தன. 

கடந்த மே 9-ம் தேதி அந்தப் பாதைகளில் ஆய்வு மேற்கொண்டபோது சில விளக்குகள் மாயமானது தெரியவந்தது. இதுவரை ரூ.50 லட்சம் மதிப்பிலான 36 பிரொஜெக்டர் விளக்குகள், 3,800 மூங்கில் விளக்குகள் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர் என்று தெரிவித்தனர்.

இருந்தும், இது தொடர்பாக போலீசார் கடந்த 9-ம் தேதி தான் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருட்டு சம்பவம் தொடர்பாக விளக்குகளை நிறுவிய நிறுவனத்தின் பிரதிநிதி, ராமஜென்மபூமி போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. 

Trending News

Latest News

You May Like