1. Home
  2. தமிழ்நாடு

இந்த தேதி முதல் சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி!



சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 16ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக, சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் மண்டல பூஜைக்காக நவம்பர் 16 ஆம் தேதி முதல் தினசரி ஆயிரம் பக்தர்களை மட்டும் அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டது.

மண்டல பூஜை மற்றும் மகர ஜோதி விழா நடக்கும் நாளில் மட்டும் 5 ஆயிரம் பேரை அனுமதிப்பது என்றும் வார இறுதி நாட்களில் 2 ஆயிரம் பேர் வரை ஐயப்பனை தரிசிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பக்தர்களை அனுமதிப்பதற்கான முன்னோட்டமாக வரும் 16 ஆம் தேதி முதல் தினசரி 250 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா தலைமை செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையில் உயர்மட்ட நிபுணர் குழு அளித்த அறிக்கையின்படி, தினசரி 1000 பக்தர்கள் மட்டும் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட பக்தர்கள் மட்டுமே சாமியை தரிசனம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like