1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் சர்ச்சையில் தேவஸ்தானம்! திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட்?

Q

பக்தர்கள் புனிதமாக கருதும் திருப்பதி பிரசாதமான லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக வெளியான தகவல் திருப்பதி பக்தர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து திருப்பதி கோவிலில் சாந்தி யாகம் உள்ளிட்ட தோஷ நிவர்த்தி பரிகாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இந்நிலையில் திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட் இருப்பதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலங்கானா மாநிலம் கம்மத்தை சேர்ந்த பத்மா என்ற பக்தர் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். கடந்த 19 ஆம் தேதி திருப்பதி கோவிலுக்கு சென்ற பத்மா, லட்டு பிரசாதம் வாங்கியுள்ளார்.

இதையடுத்து வீட்டிற்கு வந்த பத்மா, உறவினர்களுக்கு கொடுப்பதாக லட்டை உடைத்த போது அதில் குட்கா பாக்கெட்டும், குட்கா துகள்களும் இருந்துள்ளன. மேலும் குட்கா வாடையும் இருந்துள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக வெளியான அதிர்ச்சி அடங்குவதற்குள் திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட் இருந்ததாக வீடியோ வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


 

Trending News

Latest News

You May Like