துப்பறிவாளன் - 2 ஸ்கிரிப்ட் புரியாமல் முழிக்கும் விஷால்!?

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, பாக்யராஜ் நடிப்பில் 2017 வெளியான படம் துப்பறிவாளன். இது வெற்றிப் படமாக அமைந்தது. இதையடுத்து இரண்டாம் பாகத்தை உருவாக்க மிஷ்கின் , விஷால் முடிவு செய்தனர்.
துப்பறிவாளன் 2ஆம் பாகத்தின் ஷூட்டிங் 40 நாட்கள் லண்டனில் நடைபெற்றது. அதன்பிறகு மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. மிஷ்கின் அதிக சம்பளம் கேட்பதாக விஷால் கூறினார். அதற்கு இயக்குநர் மிஷ்கினும் எதிர்வினையாற்றினார். அதனைத் தொடர்ந்து படத்தை தானே இயக்க உள்ளதாக விஷால் கூறினார்.
ஆனால் தற்பொழுது விஷாலுக்கு அந்த படத்தின் கதை, திரைக்கதை என எதுவும் புரியவில்லையாம். ஊரடங்கு நேரத்தில் படபிடிப்பு இல்லாததால் அப்படியே கிடப்பில் போட்டு விட்டாராம். எடுத்தவரை பார்த்தால் எங்கு ஆரம்பம் எது முடிவு என இன்னும் குழப்பமாக இருக்கிறதாம். இப்பொழுது அவருடைய மேனேஜர் கேஸ் வேறு புதிதாக வந்துள்ளது. இப்படி பல வகைகளில் விஷால் பிரச்னையில் சிக்கியுள்ளார்.
newstm.in