14 ஆயிரம் மதுபாட்டில்கள் அழிப்பு.. அழுதுக்கொண்டே வேடிக்கை பார்த்த குடிமகன்கள் !

ஊரடங்கு காரணமாக சென்னை போன்ற பல நகரங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் குடிமகன்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.
எப்படியும் போதை ஏற்றவேண்டும் என வெறியுடன் இருக்கும் சில வெளியூர்களில் இருந்து மதுப்பாட்டில்களை வாங்கி வருகின்றனர். பலர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய பாக்ஸ் பாக்ஸ்களாக மதுப்பாட்டில்களை வாங்கி விற்பனை செய்கின்றனர்.
அந்த வகையில் வாகன தனிமைக்கையின் போது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா மாவட்ட போலீசார் 10 காவல் நிலையங்கள் மூலம் 14,189 மதுபாட்டிகளை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த மதுப்பாட்டில்களை அழிக்க மாவட்ட காவல்துறை முடிவு செய்தது. அதன்படி அந்த மதுப்பாட்டில்களை ஒரே இடத்தில் அடுக்கி அதன் மீது ரோடு ரோலரை விட்டு சில்லுசில்லாக்கினர். இதன் மதிப்பு 72 லட்சம் ஆகும்.
14ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபாட்டிகள் உடைவதை பார்க்க பலர் அங்கு கூடியிருந்தனர். மதுபாட்டில்களால் தீவிபத்து ஏற்படலாம் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன. தீ அணைப்பான்கள் தயார் நிலையில் இருந்தன
இதனை கண்ட குடிமகன்கள் மதுக்குள் அழுதுக்கொண்டே வேடிக்கை பார்த்தனர். இந்த சம்பவத்தின் போது அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
newstm.in