துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல்..!
மர்ம நபர் ஒருவர் ஜனசேனா கட்சி அலுவலத்தை தொடர்புகொண்டு பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தாகவும், அவரை குறிவைத்து அவதூறான குறுஞ்செய்திகளையும் அனுப்பியதாகவும் ஜனசேனா கட்சி திங்கள்கிழமை தெரிவித்தது.
இது தொடர்பாக ஜனசேனா கட்சியின் எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: துணை முதல்வர் பவன் கல்யாணின் அலுவல ஊழியர்களுக்கு அகண்டக்குடியில் இருந்து கொலை மிரட்டல் வந்தது. அந்த அழைப்பில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், பவன் கல்யாணை கொல்லப்போவதாக மிரட்டினார்.
மேலும் அவர் தொடர்பாக அவதூறான குறுஞ்செய்திகளையும் அனுப்பினார் என்று தெரிவித்தது. இந்த கொலை மிரட்டல் தொடர்பாக மூத்த காவல் துறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.