1. Home
  2. தமிழ்நாடு

த.வெ.க-வின் முதல் மாநாட்டிற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!

1

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில், தவெக மாநாடு குறித்த கேள்விக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: விஜய் எனக்கு ரொம்ப நாள் நண்பர். சின்ன வயதில் இருந்தே தெரியும். ஒரு தயாரிப்பாளராக எனது முதல் தயாரிப்பு அவருடைய படத்தை தான் தயாரித்தேன். நீண்ட கால நண்பர். அவருடைய புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்.


அரசியல் கட்சி தொடங்க அனைவருக்கும் உரிமை உள்ளது. 75 ஆண்டுகளில் பல கட்சிகள் வந்துள்ளன, பல கட்சிகள் காணாமல் போய்விட்டன. மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள், கொள்கைகள், மக்கள் பணி செய்வது தான் மிக மிக முக்கியம். இவ்வாறு உதயநிதி தெரிவித்தார்.
 


 

Trending News

Latest News

You May Like