துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் சகோதரருக்கு கொரோனா !! தனியார் மருத்துவமனையில் அனுமதி..
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பொதுமக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள் , போலீஸ்காரர்கள் , எம்எல்ஏக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என பல்வேறு தரப்பினருக்கும் வேகமாக பரவி வருகிறது. திமுகவில் மட்டும் சுமார் 4 எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே போல , அதிமுகவில் ஒரு எம்.எல்.ஏவுக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காலமான திமுக எம்எல்ஏ அன்பழகனை தவிர்த்து மற்ற அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரும், தேனி ஆவின் தலைவருமான ஓ.ராஜாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை அப்பல்லோ மருத்துவமனையின் கட்டுப்பாட்டிலுள்ள விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவருக்கு தனது கார் ஓட்டுநர் மூலமாக தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Newstm.in