திருமணத்திற்கு மறுப்பு.. காதலியை உயிரிருடன் எரித்துக்கொன்ற காதலனும் உடல்கருகி பலி !
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் 24 வயது இளம்பெண் ஒருவர் நர்ஸாக பணிபுரிந்து வந்தார். இப்பெண்ணும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் பிரிந்தனர்.
ஆனால் இளைஞர் தொடர்ந்து அப்பெண்ணை பின் தொடர்ந்து சென்றார். அத்துடன் தன்னை காதலிக்கும்படியும், திருமணம் செய்துகொள்ளும் படியும் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இதற்கு அப்பெண் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
எனினும் தொடர்ந்து தொல்லை கொடுத்தால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் அந்த நபர் மீது விஜயவாடா போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின்படி அந்த நபரை அழைத்து போலீஸார் எச்சரித்தனர்.
ஆனால் சில நாட்களில் மீண்டும் அப்பெண்ணை பின்தொடர்ந்து தொல்லை கொடுக்க தொடங்கினார். இந்நிலையில் நேற்றிரவு அந்த பெண்ணை அவர் தொல்லை செய்ய, அவர் மீண்டும் போலீசாரிடம் புகார் அளிக்க போவதாக கூறியிருக்கிறார்.
அப்போது தான் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை அப்பெண் மீது ஊற்றி தீயிட்டு கொளுத்தினார். அலறித்துடித்த அப்பெண் உடனே அந்த தனது முன்னாள் காதலனான இளைஞரை விடாமல் இறுக்கமாக பிடித்துக்கொண்டார். இதனால் இருவரும் தீயில் கருகினர்.
மேலும் அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மக்கள் தீயை அணைத்தனர். இதில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, 80% எரிந்த இளைஞர் அந்த இளைஞர் மீட்கப்பட்டார். அவரை மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையிலேயே இருவரும் தீபற்றி எரிந்தது உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in