தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவரை மாற்ற கோரிக்கை..!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மாவட்ட தலைவர்களை மதிப்பதில்லை, மாற்று கட்சி சிந்தனையோடு செயல்படுகிறார் என காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், அவரை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்ற கோரிக்கை விடுத்து தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்திக்க 20 மாவட்ட தலைவர்கள் டெல்லி சென்றுள்ளனர்.