1. Home
  2. தமிழ்நாடு

6 நாட்கள் முன் காணாமல் போன டெல்லி பல்கலை. மாணவி யமுனை ஆற்றில் சடலமாக மீட்பு..!

11

டெல்லியில் உள்ள பா்யவரன் வளாகத்தில் வசித்து வந்தவர் மாணவி சினேகா தேப்நாத்.இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார்.இவர்  திரிபுராவை சேர்ந்தவர். 

இவர் கடந்த 7 ஆம் தேதி மாயமானார். இதையடுத்து , அங்குள்ள போலீஸ் நிலையத்தில் மாணவி மாயமானது குறித்து புகாரளிக்கப்பட்டது.  போலீசார் நடத்திய விசாரணையின் போது, "சினேகா தேப்நாத் யமுனை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்யவுள்ளதாக எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் கைப்பற்றினர்.

போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சினேகாவை கடைசியாக சிக்னேச்சர் பாலம் அருகே இறக்கிவிட்டதாக வாடகை கார் ஓட்டுநர் தெரிவித்தார். இதையடுத்து யமுனை ஆற்றில் தேடும் பணி நடைபெற்றது. நிகம் போத் காட் முதல் நொய்டா வரையிலான பகுதிகளில்  தேசிய பேரிடா் மீட்புப் படை மற்றும் உள்ளூா் காவல்துறை உதவியுடன் தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.

இந்த நிலையில், கீதா காலனி மேம்பாலம் அருகே சினேகாவின் சடலத்தை மீட்புக் குழுவினர் நேற்று இரவு மீட்டனர். மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறார்கள். 

Trending News

Latest News

You May Like