முதல்வர் பதவிக்கு டெல்லி ஆப்பு வெச்சுடும்! பாஜக எம்.எல்.ஏ. பேச்சால் பரபரப்பு !

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் பதவிக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம் என அம்மாநில பாஜக எம்எல்ஏ ஒருவர் பேசியுள்ளதால் அம்மாநிலத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஜேடிஎஸ் - காங்கிரஸ் கூட்டணி அரசை, பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா தனது செல்வாக்கால் கவிழ்த்து, முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார்.
பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்பதால், கர்நாடக மாநில அமைச்சரவையில் இருந்து சிடி ரவி, தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். பின்னர், அவர் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பாஜக எம்எல்ஏ பசன்கவுடா பாட்டீல் யட்னால் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், எடியூரப்பாவுக்கு 75 வயதுக்குமேல் ஆகிறது. எனவே அவர் நீண்ட காலத்திற்கு முதல்வர் பதவியில் இருக்க மாட்டார் என்றும் , வடக்கு கர்நாடகா பகுதியைச் சேர்ந்த ஒருவர், முதல்வராக விரைவில் நியமிக்கப்படுவார் என கூறியுள்ளார்.
முதல்வர் மாற்றப்படுவார் என பாஜக எம்எல்ஏ ஒருவரே கூறியிருப்பதால், அம்மாநிலத்தில் அரசியல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.