கடவுள் ஆஞ்சநேயரை மனுதாரராக சேர்த்தவருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம்..!
டெல்லி உத்தம் நகர் பகுதியில்,தனியார் நிலத்தில் கோவில் கட்டப்பட்டது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தொடர்ந்த அங்கித் மிஸ்ரா என்பவர், அந்த சொத்தில் உள்ள கோவில் பொது மக்களுக்கு சொந்தமானது என்பதால், இந்த நிலம் கடவுள் ஆஞ்சநேயருக்கு சொந்தமானது எனக்கூறி, ஆஞ்சநேயரையும் ஒரு மனுதாரராக சேர்த்து இருந்தார்.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரரின் இந்த செயல், சட்ட நடவடிக்கையை துஷ்பிரயோகம் செய்யக் கூடியது. மோசமான மற்றும் தீங்கு விளைவிக்கும் நடைமுறை எனக்கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.