1. Home
  2. தமிழ்நாடு

23 நாய் இனங்களுக்கு தடை : ஒன்றிய அரசு பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்..!

1

கடந்த மார்ச் 14ம் தேதி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. 

அந்த கடிதத்தில், “வளர்ப்பு நாய்கள் தாக்குதலால் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் கீழே குறிப்பிட்டுள்ள நாய் இனங்களை வளர்க்க தடை விதிக்க வேண்டும். அதாவது, பிட்புல் டெரியர், டோசா இனு, அமெரிக்கன் ஸ்டாஃபோர்ட்ஷையர் டெரியர், ஃபிலா பிரேசிலிரோ, டோகோ அர்ஜென்டினோ, அமெரிக்கன் புல்டாக், போர்போயல், கங்கல், மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய், காகசியன் ஷெப்பர்ட் நாய், தென் ரஷ்ய ஷெப்பர்ட், டோர்ன்ஜாக், டோசாலினாக், அகிடா, மாஸ்டிஃப்ஸ், ராட்வீலர், டெரியர்ஸ், ரோடீசியன் ரிட்ஜ்பேக், ஓநாய் நாய்கள், கனாரியோ, அக்பாஷ் நாய், மாஸ்கோ காவலர் நாய், கேன் கோர்சோ ஆகிய 23 வகை நாய்களை வளர்க்க தடை விதிக்க வேண்டும். மேலும் ஏற்கெனவே வளர்க்கப்படும் நாய்கள் இனப்பெருக்கம் நடைபெறாமல் இருக்க கருத்தடை செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட நாய் இனங்களை விற்பனை செய்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் உரிமம் வழங்க கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் 23 நாய் இனங்களை விற்கவோ, இறக்குமதி செய்யவோ விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசின் உத்தரவு கருணைக் கொலைக்கு ஈடானது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது 

Trending News

Latest News

You May Like