தமிழக வீரரை 10 கோடிக்கு எடுத்த டெல்லி அணி..!
ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் இன்று சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்று(நவ.24) தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரரும் தமிழ்நாட்டை சேர்ந்தவருமான, நடராஜனை ரூ.10.75 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. கடந்த சீசனில் இவர் ரூ.4 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது
33 வயதான நடராஜன், கடந்த 2017 முதல் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். முதல் சீசனை பஞ்சாப் கிங்ஸ் (அப்போது ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’) அணிக்காக விளையாடினார். 2018 முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வருகிறார். யார்க்கர்கள் வீசுவதில் வல்லவர்.
மெகா ஏலத்துக்கு முன்னதாக அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விடுவித்தது. 61 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 67 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார். அவரது அடிப்படை விலை ரூ.2 கோடி. இந்நிலையில், அவரை ஏலத்தில் வாங்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ் அணிகள் வாங்க முன்வந்தன. இறுதியில் ரூ.10.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது டெல்லி கேபிடல்ஸ்.