1. Home
  2. தமிழ்நாடு

டெல்லி முதல்வரின் பிளாஷ்பேக்..! மைக் மற்றும் பொருட்களை பிடுங்கி அடித்து உடைத்தவர்...!

1

டெல்லியில் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை கணிக்க முடியாமல் மக்களும், பத்திரிக்கையாளர்களும் திணறினார்கள். முன்னாள் டெல்லி முதலமைச்சரான சாகிப்சிங் வர்மாவின் மகன் பர்வேஸ்வர்மா, முன்னாள் டெல்லி மாநில தலைவர் சதீஷ் உபாத்தியாயா,மற்றும் மகளிர் அணி தலைவியான ரேகா குப்தா,ஆகியோரது பெயர்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தான் நேற்று டெல்லியில் கூடிய பாஜக தலைமை ஒருங்கிணைப்பு குழுவினர் கூட்டத்தில் ரேகா குப்தா தான் அடுத்த டெல்லி முதல்வர் என்பது உறுதியாகி போனது. அதனை அடுத்து துணை முதல்வராக பரமேஸ்வர்மா மற்றும் மொத்தமாக 6 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

குஜராத் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிரதமராக பொறுப்பேற்க வந்த டெல்லி வந்த மோடிக்கு 2013 ஆம் ஆண்டு மகளிர் அணி சார்பில் வரவேற்பு கொடுத்து அசத்தியவர் இந்த ரேகா குப்தா அப்போதிலிருந்து மோடிக்கும்,ரேகா குப்தாவை கட்சியின் தீவிர உறுப்பினர் என்கிற முறையில் நன்கு தெரியுமாம். 2013 ஆம் ஆண்டு மோடியுடன் ரேகா குப்தா எடுத்த ஒரு புகைப்படத்தை தற்போது அவரது ஆதரவாளர்கள் அதிகம் பரப்பி வருகின்றனர்.

மூன்று முறை டெல்லி தெற்கு பகுதியில் கவுன்சிலராக இருந்த ரேகா குப்தா ஒரு முறை டெல்லி தெற்கு மாநகராட்சியின் மாநகர மேயர் ஆகவும் பதவி வகித்துள்ளார். பிதம்பூர் மாநகர கவுன்சிலராக இருந்தபோது மாநகராட்சி கூட்டத்தில் ஏற்பட்ட இரு கட்சிகளுக்கு இடையே ஆன தகராறில் ஆம் ஆத்மி உறுப்பினர்களுடன் நேருக்கு நேர் மல்லு கட்டினார் ரேகா குப்தா.

அப்போது நேராக மேடைக்கு சென்றவர் அங்கிருந்த மைக் மற்றும் பொருட்களை பிடுங்கி அடித்து உடைக்கும் காட்சிகள் தற்போது வைரலாக்கப்பட்டு வருகின்றன. எவ்வளவு ஆவேசமாகவும் மோசமாகவும் செயல்படும் இந்த பெண்தான் நீங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த டெல்லி முதல்வர் என ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அதை கமெண்ட் செய்து வேகமாக பரப்பி வருகிறார்கள்.


 

Trending News

Latest News

You May Like