இரண்டு 10ஆம் வகுப்பு மாணவர்களிடம் சிக்கி சீரழிந்த 8ஆம் வகுப்பு மாணவி!

பாடம் சொல்லித்தருவதாக கூறி ஒரு பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர், 8ஆம் வகுப்பு மாணவியை சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் 10ஆம் வகுப்பு படித்துவரும் ராகேஷ், அர்ஜுன் ஆகிய இரண்டு மாணவர்களும் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர்கள். அதனால் பணத்தை செலவு செய்து ஜாலியாக இருந்துள்ளனர்.
அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி இருவருக்கும் தோழி. இந்நிலையில் மாணவர்கள் இருவரும் சிறுமிக்கு பாடம் சொல்லித் தருவதாக கூறி பைக்கில் தங்களது பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு சென்ற பிறகு மாணவியை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்தனர். அதனைத் தொடர்ந்து விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி, மாணவியை வீட்டில் கொண்டு வந்து விட்டனர்.
ஆனால் அந்த மாணவி நடந்த விஷயத்தை தனது பெற்றோரிடம் கூறினார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மாணவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் மாணவர்கள் இருவரும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
newstm.in