செல்ல மகளுக்கு பெயர் சூட்டிய ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் தம்பதி..! என்ன பெயர் தெரியுமா ?
நடிகை தீபிகா படுகோன் 2018-ல் நடிகர் ரன்வீர் சிங்கைத் திருமணம் செய்துகொண்ட பின்பும் பல படங்களில் நடித்தார். இறுதியாக கல்கி வெளியாகியிருந்தது.
திருமணம் முடிந்து பல ஆண்டுகளுக்கு பிறகு தீபிகா படுகோனே கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பத்தில் இருந்த தீபிகா படுகோனே அண்மையில் போட்டோஷூட் எடுத்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
தீபிகா படுகோனே- ரன்வீர் சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர்கள் தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் தங்களது மகளின் முதல் படத்தைப் பகிர்ந்துள்ளனர். அவர்கள் தங்கள் மகளின் பெயரையும் வெளியிட்டனர் - துவா படுகோன் சிங்.
அந்த புகைப்படத்தை தீபிகா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.